கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 152வது பிறந்தநாள் விழா

செக்கிழுத்தச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 152வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
திமுக மகளிரணி இணைச் செயலாளரும்,தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவருமான ஏ.எஸ்.குமரி, திமுக மாநில பிரசாரக்குழு செயலாளர் ராணி எம்.சி, திமுக மாநில மகளிரணி சமூக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் எம்.சி ஆகியோர் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours