மண்பாண்டப் பொருட்கள் செய்யும் கூடத்தை பார்வையிட்டனர் -கனிமொழி
kani
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைசார் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுப் பயணத்தின் பகுதியாக, மதுரை – திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரி ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் மண்பாண்டப் பொருட்கள் செய்யும் கூடத்தை பார்வையிட்டனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மண்பாண்டங்கள், களிமண் சிலைகள், பொம்மைகள், அகல்விளக்கு உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சுய உதவிக் குழுக்களைச் சந்தித்தனர். தொடர்ந்து,கைவினை கலைஞர்களின் கோரிக்கை மனுக்களைக் கனிமொழி எம்.பி பெற்றுக்கொண்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் மண்பாண்டப் பொருட்களுக்கு புகழ் பெற்றது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர் குடும்பங்கள் உள்ளன. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கஞ்சிக்கலயம் முதல் கலைநயமிக்க சுவாமி சிலைகள் தரை கைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
+ There are no comments
Add yours