
PARLIA KANI
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் மக்களைவில் பாஜகவினரை அலற விட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி

பெண்கள் இடஒதுக்கீடு மசாேதா மீதான விவாதத்தில் பங்கேற்ற கனிமொழி கருணாநிதி பேச தொடங்கிவுடன், பாஜக மற்றும் சில கட்சியினர் கடும் ரகளை மற்றும் சப்தங்களை எழுப்பினார்கள்.கனிமொழி அதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கும்போது, மகாராஷ்ட்ர பெண் எம்.பி., காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சியினரைச் சேர்ந்த பெண் எம்.பி.கள் கனிமொழிக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள் மேலும் சபாநாயகரிடம் பாஜகவினரை அமைதியாக கோரினார்கள்.தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி, கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் இருந்தும் பாஜக இந்த மசோதாவை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்றும் நாள் குறித்து எந்தவிதமான உறுதியும் இன்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு பிறகே இந்த இடஒதுக்கீடு அமலாகும் என்று குறிப்பிட்டுள்ள வரிகளை கேள்விக்குள்ளாக்கினார்.
மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படும் அபாயத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மகளிர் அணியினரின் போராட்டங்களை விளக்கினார்.நீதிக்கட்சி, பெரியார் தொடங்கி மகளிர் உரிமைகளுக்காக திமுக நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் இந்தியஅரசுக்கு முன்னோடித் திட்டங்களாக கலைஞர் இயற்றிய மகளிர் நலத்திட்டங்களை தெரிவித்தார்.பேசும்போதே பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் தெரிவித்த கருத்தை கடுமையாக மறுத்துப்பேசிய போது, நீங்கள் காளி தெய்வத்தை ஏற்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனை பாஜக வினர் உடனடியாக ஆம் என்று ஆமோதித்தினர்.
இந்திரா காந்தியை குறிப்பிட்டவுடன் பாஜக வினர் ஜெயலலிதாவின் பெயரை கத்தினார்கள், சற்றும் தாமதிக்காமல் ஜெயலலிதா ஒரு வலிமையாக தலைவர் என்பதை ஏற்பதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று சாதுர்யமாக பேசி, காங்கிரஸின் சோனியா காந்தி, மயாவதி மற்றும் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களின் பெயரையும் வலுவாஜ பெண் தலைவர்கள் என பாஜக வினரை ஏற்கச் செய்தார்.குறிப்பாக இந்த மசோதாவை திருட்டுத்தனமாக மற்றுக்கட்சியினருக்கு தெரிவிக்காமல் திடீரென நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பாஜக அரசின் வெளிப்படைத் தன்மையை பகடி செய்து பேசினார்.