‘மக்கள் தொடர்பு முகாம்’ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது-கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மூலக்கரை ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் தொடர்பு முகாம்’ நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு,119 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் (விட்டுமனை பட்டா, தையல் இயந்திரம், மருத்துவ காப்பீடு, அட்டை) உள்ளிட்டவை கனிமொழி எம்.பி வழங்கினார். தமிழ்நாடு அரசு வேளாண் வளத்திற்காக தனி பட்ஜெட், புதுமை பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது என்று கனிமொழி எம்.பி பேசினார்.


மக்கள் தொடர்பு முகாமில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மாசக்தி, மூலக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பொன் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
and also : குளிர்சாதனப்பெட்டி பராமரிப்பு எப்படி?
+ There are no comments
Add yours