மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா – கனிமொழி கருணாநிதி
இன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி!’ என்கின்ற தலைப்பில்,

மாவட்ட கனிமவள நிதி மற்றும் NTPL நிறுவன சமூகப் பொறுப்பு நிதி ஆகியவற்றிலிருந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் (சிவந்தாகுளம் மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்படவிருக்கும் கூடுதல் கட்டிடங்களுக்கு) திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார். ரூ 69 இலட்சம் மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும் மற்றும் ரூ 2.55 கோடி மதிப்பீட்டில் மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours