
6
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அருங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில், 3 பயனாளிகளுக்கு ரூ. 63,020 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 1 பயனாளிக்கு ரூ. 8,000 திருமண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு ரூ. 4,011 மதிப்பில் விவசாய இடுபொருள் என 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 75,031 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
மக்கள் களம் நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.