
2
இறகுப்பந்து விளையாடிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி
தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் அருகில்,தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.150.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா இன்று (28/10/2023) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு உள்விளையாட்டு அரங்கினை திறந்து வைத்தார். தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் இறகுப் பந்து விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்து, இறகுப்பந்து விளையாட்டை விளையாடினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.