ஒரு இந்தியனாக பாராளுமன்றத்தில் இந்தியாவை பற்றி குரல் எழுப்புவேன்- கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

சென்னை எழும்பூரில் உள்ள TAG ஆடிட்டோரியத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையம், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் (MSSW) மற்றும் வானவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.தமிழக அரசு என்பது எல்லோருக்குமான ஒன்று.எல்லோரையும் ஒருங்கிணைத்து,எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்த பெரியார்

வழியில் வரக்கூடிய அரசு, தமிழ்நாடு அரசு. இது தமிழ்நாடு மாடலாக மட்டும் முடிந்து விடாமல், இந்திய அளவிலே, நிச்சயமாக பாராளுமன்றத்திலும் இது பற்றி குரல் எழுப்புவோம். தற்போது இந்தியா என்று சொல்ல வேண்டுமா? இல்லையா? என்று பல குழப்பங்கள் இருக்கின்றது. நமக்கு அது எப்போதும் இந்தியா தான். As an Indian, I will definitely raise it in Indian Parliament. (ஒரு இந்தியன் என்ற முறையில் இதை இந்திய நாடாளுமன்றத்தில் நிச்சயம் எழுப்புவேன்) என்று பேசினார்.
+ There are no comments
Add yours