
1
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைத் திருவிழா 2023 – 2024 மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று நடைபெற்றது விழாவை கனிமொழி தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்
தூத்துக்குடி மாவட்டம் – வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைத் திருவிழா 2023 – 2024 மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று நடைபெற்றது. விழாவுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
விழாவில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், பள்ளி கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் முனுசாமி, மாவட்ட மாடல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி நிறுவனர் ஆனந்த் கல்லூரி முதல்வர் ராபின், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2023-2024-ம் ஆண்டு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபடி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது.
