
1
நேற்று தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் அவர்களின் உதவியாளர் ஜெய்சங்கர் அவர்களின் மகள் J.ஜெயஸ்ரீ – தி.மு.கழக உறுப்பினர் பிரபாகர் கொறைரா அவர்களின் மகன் P.ரொபின் கொறைரா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்ட செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.