
KANIMOZHI
HIGHLIGHTS : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாடு முக்கிய பங்காற்றும்
சரி சமமாக இருக்கும் பெண் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை மகளிர் உரிமை மாநாடு ஏற்படுத்தும் – திமுக எம்பி கனிமொழி பேட்டி
மகளிர் உரிமை மாநாட்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 14 அடியில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.
சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் உரிமை மாநாடு என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது .
மணல் சிற்பமானது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புகைப்படதுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் சிற்பமானது 14 உயரமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த சிற்பத்தை நேற்றிலிருந்து வடிவமைக்கப்பட்டு வருகின்றனர். சிற்பத்தை 12 பேர் சேர்ந்து தொடர்ந்து 30 மணி நேரமாக வடிவமைத்துள்ளனர்.
மணற் சிற்பத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி,
அம்மையார் சோனியா காந்தி,பிரியங்கா காந்தி, முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முக்தி, சுப்ரியா சூலே, டிம்பிள் யாதவ் என்று மகளிர் உரிமை மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மிக முக்கியமான பெண் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தலைமை ஏற்று நடத்துகிறார்..
இன்று நாடு முழுவதும் மக்களுக்கு இடையே காழ்புணர்வு அரசியலை பாஜக அரசு உருவாக்கி கொண்டு இருக்கிறது.
மணிப்பூரில் நடந்த கலவரங்களில் மிக பெரிய அளவிலே பாதிக்கப்பட்டு இருக்க கூடிய சூழலை பெண்கள் தான் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆளும் பாஜக அரசியலுக்காக வெறுப்பை உருவாக்கும் போது பெண்கள் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் குரல், பெண் தலைவர்களின் கருத்துகளை மைய படுத்தக்கூடிய விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் உள்ளது. சரி சமாமாக இருக்கும் வாக்காளர்கள் பெண்கள். பெண்களுக்கான விழிப்புணர்வை வகையில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும் என்றார்.