
kani
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘மகளிர் உரிமை மாநாட்டின்’ அழைப்பிதழை நேரில் வழங்கி மாநாட்டிற்கு அழைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, சென்னையில் (14/10/2023) அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.