
KANIMOZHI
HIGHLIGHTS : ஸ்டெம் பார்க்,கழிவுநீர் கால்வாய் பணிகள்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயநலக் கூடம் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது – கனிமொழி

இன்று , தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேருந்து நிலையமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.57 கோடியிலும் அம்பேத்கர் நகரில் ரூ. 29 கோடியில் ஸ்டெம் பார்க்கும் (STEM PARK) புதிதாக கட்டப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
அதுபோல, ரூ.87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடமும், பொதுப்பணித்துறை சார்பில் கழுகுமலை எட்டையபுரத்தில் ரூ.5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.75 கோடி மதிப்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயநலக் கூடம் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக
செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.