
kanimozhi
HIGHLIGHTS ; பேருந்து நிலையம் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் புதிய திட்டப்பணி அடிக்கல் நாட்டும் விழா – கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் நகராட்சியில்,மூலதன மானிய நிதி உதவித் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை மேம்பாடு உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் மூலதன மானிய நிதி உதவித் திட்டத்தின் கீழ் புதிய அலுவலக கட்டிடம், பேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட கட்டப்படவுள்ள புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், நகராட்சி நிர்வாகம் &

குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.