முதல் பரிசு 10 இலட்சம் – கலைஞர்100 வினாடி வினா போட்டி

Estimated read time 1 min read
Spread the love

கலைஞர்100 வினாடி வினா போட்டி : முதல் பரிசு 10 இலட்சம்..! திமுக துணைப் பொதுச் கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில், திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாட்டின் மாபெரும் வினாடி வினா போட்டி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று  கலைஞர்100 வினாடி வினா போட்டியை திமுக துணைப் பொதுச் கனிமொழி கருணாநிதி எம்.பி டிவிட்டர் “X” பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் வெளியிட்டு துவக்கி வைத்தார். கலைஞர் 100 வினாடி விடை, 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா 10 இலட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

kalaignar100.co.in இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். சுமார் பத்தாயிரம் கேள்விகளை கொண்ட இந்த வினாடி வினா போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் – 18 வயதிற்கு மேல் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்த வினாடி வினா போட்டியானது மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக மாவட்ட அளவிலான சுற்று. இரண்டாவதாக மண்டல அளவிலான சுற்று. மூன்றாவதாக அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று. முதல் சுற்று ஆன்லைனில் நடைபெறும். கலைஞர்100 இணையத்தளத்தில் விவரங்களை பதிவு செய்வதன் மூலம் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.

ஆன்லைன் சுற்றில் ஒரு குழுவானது அதிகபட்சம் 100 முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஒரு முயற்சியை முடிக்க நூறு வினாடிகள் உள்ளன. மாவட்ட அளவிலான தவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர். இரண்டாவது சுற்று மண்டல அளவில் நேரடி குழு போட்டியாக நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவர்.

இறுதிச்சுற்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரமாண்டமாக சென்னையில் நடைபெறும்.

திராவிட இயக்கத்தை பற்றியான அறிவை வெளிப்படுத்தும் இப்போட்டியில் ரூபாய் 38 லட்சத்திற்கும் மேலான மொத்த பரிசுகள் உள்ளன. திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்றையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முன்னெடுப்பு இந்த வினாடி வினா போட்டி.

100
100

கலைஞர் 100 வினாடி வினா, 18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா 10 இலட்சம், இரண்டாம் பரிசு 6 இலட்சம், மூன்றாம் பரிசு 3 இலட்சம். 38 லட்சத்திற்கு மேலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ‘கலைஞர் 100’ வினாடி-வினா போட்டிக்கு அனைவரும் தயாராக வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours