
SWAMI
HIGHLIGTHS ; சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், சாமிநாதன், மா. சுப்ரமணியன், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்,

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அறிவுரைப்படி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த தமிழ் மண் , மக்கள், மொழி இருக்கும் வரை இவர் புகழ் நிலைத்து இருக்கும்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பத்திர்க்கைத்துறையில் இதழ் துவங்கி இன்று செய்தி தொலைக்காட்சி வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அண்ணா காலத்தில் சபாநாயக்கராகவும், கலைஞர் காலத்தில் அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர்.
மக்கள் இன்றும் பெயர் சொல்லும் அளவுக்கு சிறப்பாக பணியாற்றியவர்.