படவா’ ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு.

இயக்குநர் சரவணன் சக்தி பேசியதாவது…
இது மிகப்பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நடிகர் சவுந்திரராஜா பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் வணக்கம்.
பாடகர் வேல்முருகன் பேசியதாவது…
இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். ‘படவா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது.
and also:நடிகர்கள் விமல், சூரி இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை
[…] […]