மதுரை மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் கை கொடுக்கும் – ஜெயக்குமார் பேட்டி

Estimated read time 1 min read
Spread the love

அ.தி.மு.க. மதுரை மாநாடு தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் கை கொடுக்கும்; தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க.கையில் எடுத்திருக்கிறது-அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

மதுரையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு‌.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக வட சென்னை தெற்கு-கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாகனங்கள் மூலம் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டனர். மதுரை மாநாடுக்கு தொண்டர்கள் செல்லும் வாகனங்களை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.‌ இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்‌ பேசுகையில், அ.தி.மு.க. மாநாடு போன்று யாரும் மாநாட்டை நடத்தப் போவதில்லை. எதிர்காலத்தில் எங்களுடைய மாநாட்டை முறியடிக்க வேண்டும் என்றால் அது எங்களுடைய மாநாட்டின் மூலம் தான் முடியும். கச்சத்தீவை பொருத்தமட்டில் 1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வராக யார் இருந்தார் கருணாநிதி தான். அன்று கச்சத்தீவை தாரை பார்க்கும் பொழுது முதல்வர் கருணாநிதி வாயை மூடிக்கொண்டு இருந்தார். ஆனால் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. கச்சத்தீவு தாரை பார்க்கும் பொழுது கருணாநிதியிடம் இரண்டு முறை கலந்த ஆலோசனை செய்யப்பட்டதாக அப்போது மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் இசைவு இல்லாமல் எப்படி ஒப்பந்தம் போட முடியும்.

தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை தி‌.மு.க. கையில் எடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் மீனவ சமுதாய மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்துள்ளனர். எங்களுடைய ஆட்சியின் பொழுது மத்திய அரசை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக வெளியே கொண்டுவரப்பட்டனர். சட்டப்பேரவையில் மீனவர் பிரச்சனையின் பொழுது பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என விமர்சனம் செய்தார். பேராசை காரணமாக அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கிறார்கள் என விமர்சனம் செய்திருந்தார். தி.மு.க. தமிழக மீனவர்களுக்காக பேசாமல் இளைஞர்கள் இலங்கைக்காக பேசி வருகிறது. சிங்களர்களுக்காக பேசக்கூடிய கட்சி தான் திமுக. கச்சத்தீவை பொருத்தமட்டில் அதிமுகவின் நிலைப்பாடு அது மீட்கப்பட வேண்டும். 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடியேற்றம் பொழுது திமுகவால் தாரைவாக்கப்பட்ட கட்சத் தீவு மீட்கப்படும் என தெரிவித்தார். இது தொடர்பாக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போதேல்லாம் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறோம். கடந்த இரண்டு வருடத்தில் ஏதேனும் தீர்மானம் கட்சி தீவு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதா? ராமநாதபுரத்தில் நடைபெற்றது மீனவர்கள் மாநாடு இல்லை திமுக போர்வையில் நடைபெற்ற மாநாடு… மீனவர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்து விட்டனர். மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றக் கச்சத்தீவு விவகாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. தேர்தலில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் நடைபெற்ற தொடர்பாக அன்றே பல்வேறு பகுதிகளில் செய்திகள் வெளியானது ஆனால் திருநாவுக்கரசர் மாற்றி மாற்றி ஏன் பேசுகிறார். அதிமுக செய்தி வரக்கூடாது என்பதற்காகத்தான் இருபதாம் தேதி திமுக உண்ணாவிரதம் காலையில் இருந்து மாலை வரை இருக்கிறது. இரண்டு வருடங்கள் ஆகியும் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்கவில்லை. அதிமுக மதுரை மாநாடு தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் கை கொடுக்கும் என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours