
L
‘இறைவன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி, “அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். ‘எம். குமரன்’ படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். ‘இறைவன்’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் அகமது கடின

உழைப்பாளி. இங்கு வந்திருக்கும் ஜெயம் ரவி, விஜய்சேதுபதி இரண்டு பேரும் சம்பளம் குறித்து கவலைப்படாமல் கதை, இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள். படத்திற்கு என் வாழ்த்துக்கள்”.
எடிட்டர் மணிகண்ட பாலாஜி, ” இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. திரில்லர் ஜானரில் படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
AND ALSO : நயன்தாராவுடன் காம்பினேஷன் கிடைத்தது மகிழ்ச்சி – நடிகை விஜயலட்சுமி