ஓசூர் பகுதியில் சபா கூட்டத்திற்கு மக்கள் பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு

Estimated read time 1 min read
Spread the love

ஓசூர் மாநகராட்சி பகுதி சபா கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு.

hosur4
hosur4

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டு பகுதியில் உள்ள குமரன் நகரில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்கள் குடியிருந்து வரும் வ உ சி நகர், குமரன் நகர், ஜனகபுரி லே-அவுட், பசுமை நகர், கிருஷ்ணப்பா காலனி, செயின்ட் மேரிஸ் நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் எவ்விதமான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தரவில்லை என குற்றம் சாட்டினர்.குடியிருப்பு பகுதிகளில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை என்றும் தெரிவித்தனர்.ஏற்கனவே இந்த வார்டு பகுதியில் மின் விளக்கு மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் கடந்த சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் குறை கூறினர்.

எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக இந்த பகுதிகளில் ஏராளமான பாம்புகள் நடமாட்டம் உள்ளது என்று கூறிய பகுதி மக்கள், இன்று இரண்டு நாகப்பாம்புகள் அந்தப் பகுதியில் இருந்ததை பாம்பு பிடி வீரரை வைத்து பிடித்ததை கூட்டத்திற்கு கொண்டு வந்து காட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் சிக்காரி என்று அழைக்கப்படும் வட மாநிலத்தவர்கள் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கி விடுவதுடன் அவர்களால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இவர்கள் அவ்வப்பொழுது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை திருடி செல்வதுடன் கற்களை வீசி தொந்தரவு செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், செல்போன்களை பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபடும் இவர்கள் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலம் விதமாக அசுத்தங்களை செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே இது போன்ற குறைகளை சீர் செய்ய வேண்டும் எனக் கூறி ஏற்கனவே மாநகராட்சி நிர்வாக கட்டிடம் பலமுறை மனுக்கள் அளிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள தங்களுக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்களுக்காவது உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours