
hosur news

ஒசூர் அருகே கணவன் உயிரிழந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு: முதிர்வயதிலும் இணை பிரியாத தம்பதியினரின் மறைவு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள மணியாங்கல் கிராமத்தை சேர்ந்த பெரியசாக்கப்பன்(80) – எலசம்மா (72) தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளநிலையில்
பெரியசாக்கப்பன் நேற்று காலை 11 மணியளவில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்..
கணவர் உயிரிழப்பால் சோகத்தில் ஆழ்ந்த எலசம்மா 1 மணியளவில் அழுதவாறே உயிரிழந்துள்ளார்
60 ஆண்டுகளாக இணை பிரியாத இந்த முதியர் வயது தம்பதி, மரணத்திலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்தது கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..
கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என திருமணமான ஆரம்ப காலங்களிலும் காதலிக்கும் நேரங்களிலும் உருட்டும் இளம் பெண்களுக்கு மத்தியில் நிஜமாகவே வாழ்ந்த தம்பதியர் காலத்தால் நினைவுகூற்பவர்களாக இருப்பார்கள்
முதியோரின் உடல்கள் இன்று உற்றார், உறவினர்கள் சூழ நல்லடக்கம் செய்யப்பட உள்ளது..