அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது! பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது,
”இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.”
நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசியதாவது,
”இயக்குநர் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார். நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். அவரது பாடலுக்காகக் காத்திருக்கிறேன். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.”
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது,
”என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் தேர்வு செய்துள்ள நடிகர்களுக்கு இந்தப்படம் நல்ல கதாபாத்திரமாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன். அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கும் நன்றி. அவர்களுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும்.

எங்கள் இளம் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது,
”GEMBRIO PICTURES முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கொரானா காலத்தில் கேட்டேன். அர்ஜுனின் அநீதி படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார். படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன். படத்தின் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள்.” பகிர்ந்து கொண்டனர் அனைவருக்கும் நன்றி.’
+ There are no comments
Add yours