ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” முதலில் வித்தியாசமான ஒரு கதையை சொல்கிறோம் என்றால்.. அதை படமாக்க துணிச்சல் வேண்டும். திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என ஏராளமான சென்டர்கள் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நாம் சொல்லும் விசயம் புரிய வேண்டும். சிலருக்கு கதை புரியாமல் போய்விடுமோ..? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்பாளருக்கும், இந்த கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கலாம் என்று தீர்மானித்ததற்கும் முதலில் நன்றி.வித்தியாசமான கதையை புரிந்து கொண்டு நடிக்க ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர் வேண்டும். அந்த வகையில் இந்த கதையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்ட சகோதரர் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகை கௌரி கிஷன், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படம் வெளியாகும் போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நன்றாக வசூலித்துக் கொண்டிருந்தது. அப்படியொரு சூழலில் இந்த திரைப்படத்தை காண மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்களா..! என்ற கேள்வியும் இருந்தது. இது தொடர்பான பயமும், குழப்பமும் படக்குழுவினருக்கும் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு பேராதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து நான்காவது வாரமும் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தில் சில விசயங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ..! என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அதனை வரும் படைப்புகளில் சரி செய்து கொள்வேன்.
ஊடகங்களில் வெளியான நேர் நிலையான விமர்சனங்களால் தான் ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும்… ‘அடியே’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்தார்கள். இதனால் ஊடகத்தினருக்கு என்னுடைய நெஞ்சில் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் திரைப்படம் ரசிகர்களால் சரியான வகையில் புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால்.. இனி நாமும் வழக்கமான சினிமாவை இயக்கலாம் என தீர்மானித்திருப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் நன்றாக அனுபவித்து உற்சாகமாக கொண்டாடினர். இதை பார்த்த பிறகு தான்.. இனி தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து உருவாகும் திரைப்படமும் வித்தியாசமான கதைக்களம் தான்.” என்றார்.
[…] AND ALSO :ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் ந… […]