
G K VASAN
HIGHLIGTHS : கூட்டணி குறித்து தக்க சமயத்தில் அறிவிப்போம். மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமாக துணை நிற்கும் – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி
தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது கூட்டணி குறித்து தக்க சமயத்தில் அறிவிப்போம்
நாட்டு நலன் மக்கள் நலன் இயக்க நலனை முன்னிறுத்தியே கூட்டணிக்கு குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்
இந்த ஒரு மாத காலமாக டெல்டா விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர்.
நெற்பயிர்கள் கருகி உள்ளது விவசாய நிலங்கள் பாலம் பாலமாக உள்ளது.
முறையாக தண்ணீரை கொடுக்க வேண்டுகிறேன்.
அதிமுக உடன் நல்ல நட்பில் உள்ளோம்.
மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமாக துணை நிற்கும்.
வளமான பாரதம் அமைவதற்கு எங்கள் தேர்தல் வியூகம் அமையும்.