“சைரன்” பட ஜெயம் ரவி கேரக்டர் ஃப்ரீபேஸ் லுக் !!

Estimated read time 1 min read
Spread the love

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் !!!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது.

jaya
jaya

இதுவரை திரையில் தோன்றாத வித்தியாசமான லுக்கில், ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் !!ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சர்யம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீபேஸ் லுக்கை வெளியிட்டுள்ளனர்.இந்த ஃப்ரீபேஸ் லுக்கில், 21 வருட திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை திரையில் தோன்றியிராத தோற்றத்தில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார். இக்கதாப்பத்திரத்திற்காக தன் உடலை மாற்றி 1 1/2 வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், அசத்தலாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு நேரெதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு பாத்திரத்திலும் அவர் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.தற்போது வெளியாகியிருக்கும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக அமைந்துள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ்
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S
ஒப்பனை: மாரியப்பன்
ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
விளம்பர வடிவமைப்பாளர்: யுவராஜ் கணேசன்
வண்ணம்: பிரசாத் சோமசேகர்
DI: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM)
மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்)

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours