கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க என்னிடம் ரகசியம் உள்ளது : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேச்சு

கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை வரவழைக்க என்னிடம் ரகசியம் உள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியே வந்தால் கண்டிப்பாக காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் அதை உடனடியாக அவர்கள் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேசினார்.ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழர்களுக்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் நீட் தேர்வை நீக்க தங்களிடம் ரகசியம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினர். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை, நான் ஒரு சீக்ரெட் ரகசியம் கூறுகிறேன். கர்நாடகா அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்து வருகிறது. நான் கூறும் ரகசியத்தை திமுக செய்தால் கண்டிப்பாக மோடி அவர்கள் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை விடுவார். அந்த ரகசியம் என்ன என்றால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியே வந்தால் நாளைக்கே கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்கும் என கூறினார்.
திமுகவினர் மக்களை ஏமாற்றி, பொய்களை கூறி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தனர். ஆட்சிக்கு வந்தாலும் 5 வருடங்கள் மட்டுமே ஆட்சியில் இருப்பார்கள், அதன் பிறகு அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள், 5 வருடம் திமுகவினர் ஆட்சியில் இருந்தார்கள், அதன் பிறகு எம்.ஜி.ஆர் வந்தபின் அவர்கள் ஆட்சிக்கு வர முடியவில்லை தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தார். அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திமுகவால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை, சிறுபான்மை மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 2 கோடி குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனக்கூறி தற்போது ஒரு கோடி மக்களுக்கு மட்டுமே 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார்கள் இதுவும் ஏமாற்று வேலையாகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி அரசு ஊழியர்களையும் திமுகவினர் ஏமாற்றியுள்ளார்கள் என காட்டமாக பேசினார்.இந்த கூட்டத்தில் அதிமுக மாநகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours