போதைப்பொருட்களுக்கு எதிரான ‘உறுதி’ விழிப்புணர்வு குறும்படம்

Estimated read time 1 min read
Spread the love

போதைப்பொருட்களுக்கு எதிரான ‘உறுதி’ விழிப்புணர்வு குறும்படம்

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பக்கபலமாக நின்று தங்களது பங்களிப்பை தரும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில்  இந்த இரண்டு குறும்படங்களையும் இயக்குனர் மங்கை அரிராஜன் இயக்கியுள்ளார். ஜே.முகமது ரபி இதனை தயாரித்துள்ளார். இந்த உறுதி என்கிற இரண்டாவது விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

உறுதி
உறுதி

நடிகர் ராஜேஷ் பேசும்போது, போதை பொருட்கள் மட்டுமல்ல, போதை பழக்க வழக்கங்களும் நம்மை அடிமையாக்கி விடும். சோம்பேறித்தனமே ஒரு போதை தான். எந்நேரம் வேலை செய்து கொண்டிருப்பதும் ஒரு போதை தான். எந்தவித போதை பழக்கமும் இல்லாததால் தான் நான் இந்த இந்த வயதிலும் குரல் முதல் முகம் வரை பொலிவாக வைத்துக் வைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போதுதான் நாம் எத்தனை வயது வரையும் திட்டங்களை தீட்ட முடியும். நம் குடும்பமும் நன்றாக இருக்கும். மங்கை அரிராஜன் இரண்டு குறும்படங்களையும் சிறப்பாக பண்ணியிருக்கிறார். தமிழக முதல்வரின் மிகப்பெரிய முன்னெடுப்பு இது. இளைஞர்களின் போதை பழக்கம் என்பது அவர்கள் குடும்பத்தை மட்டுமல்ல அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் ஜீன் வரை ஊடுருவி பாதிக்கக் கூடியது” என்றார்.

                                                                         and also : பச்சைக் காய்கறிகளில் ஊட்டச்சத்து அடங்கியுள்ளது

 

பல் சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஜெ.முகமது ரபி பேசும்போது, “மாண்புமிகு தமிழக முதல்வர் போதை இல்லாத தமிழகம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும், அனைத்து மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதில் எங்களையும் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்பதற்காக முதலில் ‘ஒழுக்கம்’ என்கிற குறும்படத்தையும் தற்போது உறுதி என்கிற குறும்படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளோம். இந்தியாவிலேயே தமிழகம்தான் போதைப்பொருள் பயன்பாட்டில் குறைவான அளவில் இருக்கிறது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்ரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இது அறவே அகற்றப்பட வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் பல் சமய நல்லுயிர் இயக்கம் இந்த குறும்படங்களை தயாரித்திருக்கிறது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் மத நல்லிணக்க பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

இயக்குனர் மங்கை அரிராஜன் பேசும்போது, “மங்கை என்பது நான் இயக்கிய சீரியலுக்காக தமிழக மக்கள் அன்புடன் கொடுத்த பட்டம். நான் கலைஞர் ஐயாவிடம் பணிபுரிந்தவன். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் கடந்த மாதம் கலைவாணர் அரங்கத்தில் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி அதில் ஒரு உறுதிமொழியை எடுத்து இதை துவக்கி வைத்தார். அதனை பின்பற்றி நாங்களும் இந்த குறும்படங்களை தொடர்ந்து வெளியீடு செய்திருக்கிறோம்” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours