Home Business இந்திய மக்கள் ஆவேச முடிவு.. கூகுளில் குவியும் “புறக்கணிப்பு”

இந்திய மக்கள் ஆவேச முடிவு.. கூகுளில் குவியும் “புறக்கணிப்பு”

10 second read
0
0
246
made in china products in india list

Boycott China Products: சீன பொருட்கள் வேணவே வேணாம்.. இந்திய மக்கள் ஆவேச முடிவு.. கூகுளில் குவியும் “புறக்கணிப்பு”

 

‘புறக்கணிப்பு’ பட்டியலில் உள்ள சீன தயாரிப்பு பொருட்கள் எவை எவை என்பதை கூகிளில் அதிகமான இந்தியர்கள் தேடுகிறார்கள். லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து இந்த மாற்றம் அரங்கேறியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி கூடாரம் அமைத்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் மோதல் வெடித்தது இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால் பட்டியலை சீனா வெளியிடவில்லை.

இதனிடையே இந்திய வீரர்களை திட்டமிட்டு கொன்ற சீனாவிற்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். இனி சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில்லை என்று பலரும் முடிவு செய்துள்ளனர். பல்வேறு வணிக கூட்டமைப்புகளும் சீன தயாரிப்பு பொருட்களை இனி விற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளன., பல்வேறு கட்சிகளும் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்போம் என்று களம் இறங்கி உள்ளன.

made in china products in india list
made in china products in india list

இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் சீன பொருட்களின் பட்டியல், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன தயாரிப்புகளின் பட்டியல், சீன தயாரிப்புகளுக்கு மாற்று” ஆகியவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இந்திய மக்கள் அதிகம் பேர் தேடி வருகிறார்கள். அத்துடன் சீன ஆப்கள், சீன ஆப்கள் இந்தியா, சீன பொருட்கள் இந்தியா என்று தேடுகிறார்கள்.

 

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் இந்தியா சீனா எல்லையில் பதற்றங்கள் அதிகரித்ததால், 3 இடியட்ஸ்’ பட புகழ் வினு வினோத் சோப்ரா சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து #BoycottChina, #BoycottMadeinChina, #BoycottChineseApps மற்றும் #BoycottTiktok ஆகியவை சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின. இப்போது இவை டிரெண்டாகி வருகின்றன

மக்கள் பலரும் இனி சீன பொருட்களை இனி வாங்குவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். அண்மையில் எல்லையில் நடந்து வரும் பதற்றத்தை அடுத்து தங்கள் தொலைபேசிகளில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்கினர். மேலும் தொலைபேசிகளிலிருந்து சீனாவின் பல்வேறு மொபை ஆப்களை நீக்கினார்கள். இதற்கிடையில், ஜூன் 16 ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்த பின்னர் புறக்கணிக்கப்பட வேண்டிய 500 க்கும் மேற்பட்ட ‘மேட் இன் சீனா’ தயாரிப்புகளின் பட்டியலை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) வெளியிட்டுள்ளது

Load More Related Articles
Load More By admin
Load More In Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Russian a relationship in california : Tandem dating website In United States Of America

Russian a relationship in california : Tandem dating website In United States Of America W…