சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில். Drive Against Drug
(DAD) என்ற பெயரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி
நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளி. கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு
கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள்
மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும். போதைப்பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு
வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப.
அவர்கள் 08.08.2023 முதல் 13.08.2023 வரை போதை பொருட்களுக்கு எதிரான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (09.08.2023), அண்ணாநகர் காவல் மாவட்டத்தில்,
சென்னை பெருநகர காவல் சார்பில், K-3 அமைந்தகரை காவல்நிலைய
எல்லைக்குட்பட்ட வின்சென்ட் பள்ளி வளாகம், திரு.வி.க. பள்ளி வளாகம், W-7
அண்ணாநகர் AWPS காவல் குழுவினர் தலைமையில், சூளைமேடு, கேந்திரிய
வித்யாலயா பள்ளி வளாகம், சென்னை மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில்
‘‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்‘‘ நடத்தப்பட்டு, காவல் துறை சார்பில்
முன்மொழிந்த போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும்,
திரு.வி.க. பூங்கா, அண்ணா வளைவு சந்திப்பு, புல்லா அவென்யூ சந்திப்பு, அண்ணாநகர்
டவர் பூங்கா, எம்.ஜி.ஆர். காலனி ஆகிய பகுதிகளிலும், பொதுமக்களுக்கு காவல்
குழுவினர் மூலம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, போதை ஒழிப்பு
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புளியந்தோப்பு காவல் மாவட்டம்
இன்று (10.08.2023), K-1 செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின்ட்
மேரி சாலையில், உள்ள Chevaliar T. Thomas Elizabeth (CTTE) மகளிர் கல்லூரி
வளாகத்தில், புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் திரு.ஐ.ஈஸ்வரன்
தலைமையில், செம்பியம் சரக உதவி ஆணையாளர் திரு.செம்பேடு பாபு, K-1 செம்பியம்
காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் மூலம் போதை ஒழிப்பு
விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், போதை பொருட்களை
பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்புகள் குறித்து எடுத்துரைத்து,
காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இம்முகாமில் சுமார்
800 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
அண்ணாநகர் காவல் மாவட்டம்
திருM..மனோகர்,இ.கா.ப., காவல் இணை ஆணையாளர், மேற்கு மண்டலம்
தலைமையைல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் திரு.ரோஹித்நாதன்,
இ.கா.ப,, அண்ணாநகர் சரக உதவி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் K-4
அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர், வள்ளியம்மை
மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் சித்தா மருத்துவ கல்லூரி மாணவர்கள்
ஒருங்கிணைந்து, இன்று (10.08.2023) அண்ணாநகர் ரவுண்டனா அருகில், போதை
ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தி, வாகனங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
அடையாறு காவல் மாவட்டம்
கிண்டி சரக காவல் உதவி ஆணையாளர் திரு.சிவா தலைமையில், J-7 வேளச்சேரி
காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர், வேளச்சேரி குருநானக் கல்லூரி
வளாகத்தில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இம்முகாமில், போதை
பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்புகள் குறித்து
எடுத்துரைத்து, காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இம்முகாமில் சுமார் 150 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், கிண்டி
சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், தொழிலாளர்களுடன் போதை ஒழிப்பு
விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இம்முகாமில், போதை பொருட்களை
பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து, காவல்துறை சார்பில்
போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இம்முகாமில் சுமார் 150 தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours