ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த ‘லைக்கா’ சுபாஷ்கரன்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.

ராகவா லாரன்ஸ் பேசுகையில், ” மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களை அனைத்து
மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் . இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பர். அவர்களிடத்தில் திரிஷா. நயன்தாரா.. நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே.. அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே.! எனச் சொல்வேன்.நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களு

க்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ.. கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.
என்னை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதில் சிலரை தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் என்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. வாழ்கிறவன் மனிதன். வாழ வைப்பவன் கடவுள் என்று சொல்வார்கள். எங்கள் மாணவர்களை வாழ வைத்த சுபாஸ்கரன் எங்களுக்கு கடவுள்.என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து

கொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும் போது.. கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.சந்திரமுகி படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு முறை சந்திக்கலாமா..? என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர். ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்.. என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும். அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக் கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவரிடம் அதே விருந்தோம்பலும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.அப்போதுதான் எனக்கு வள்ளலார் சொன்னது.. பட்டினத்தார் சொன்னது.. நபிகள் நாயகம் சொன்னது.. ஜீசஸ் சொன்னது.. நினைவுக்கு வந்தது. இந்த உலகத்தை கட்டி போட வேண்டும் என்றால், அதனை அன்பால் மட்டும் தான் முடியும். இத்தகைய அன்பை சுபாஷ்கரனிடம் அன்றும் பார்த்தேன். இன்றும் பார்த்தேன். உங்களின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் பிரம்மாண்டமான லைக்கா நிறுவனத்தில் நானும் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
[…] and also : ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோ… […]