சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன்
c2
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ” அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு தளத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார்.. என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்படத்துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குனராகவும்.. பிறகு நடிகராகவும்.. பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர். அவர் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொc2
ண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார்.நான் வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார்.லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், ” ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார். ” என்றார்.
கலை இயக்குநர் தோட்டா தரணி பேசுகையில், ” நான் நிறைய படங்களில் பணியாற்றிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் புதிதல்ல. வாசு சாரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர்தான் இந்த படைப்புக்கு கேப்டன். அவர் சொல்லும் விசயங்களை தான் நாங்கள் உருவாக்கித் தருகிறோம். அதை நான் மட்டும் தனித்து செய்வதில்லை. என்னுடைய மகள், என்னுடைய சகோதரர் மற்றும் என் உதவியாளர்கள் என ஏராளமான திறமையானவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ” என்றார்.
+ There are no comments
Add yours