‘ஆஸ்கார் அற்புதன்’ எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பாடல்கள் வெளியீடு

Estimated read time 1 min read
Spread the love

‘ஆஸ்கார் அற்புதன்’ எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பாடல்கள் வெளியீடு

c2
c2

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில், ” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.

சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ” இப்படத்தின் பாடல்களை உருவாக்குவதற்காக மைசூரில் இசையமைப்பாளர்  கீரவாணியுடன் தங்கினேன். ஒவ்வொரு பாடல் உருவான விதமும் சுவராசியமாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. அவருடைய அறைக்குச் சென்று கம்போசிங் தொடங்கலாமா? என கேட்டபோது, முதலில் என்னுடன் செஸ் விளையாடுங்கள் என்றார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு பாடல்களை குறுகிய கால அவகாசத்தில் உருவாக்கினார். அவருடைய மெல்லிசை பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.அவர் என்னிடமும்,

c2
c2

இயக்குநர் வாசு சாரிடமும் ஒரு  விசயத்தை தெளிவுப்படுத்தினார். சந்திரமுகி 2 படத்தின் தமிழ் பதிப்பிற்கு சைதன்ய பிரசாத்தும், தெலுங்கு பதிப்பிற்கு மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதட்டும் என்றார். தெலுங்கு பதிப்பிற்கான தமிழ் பாடல்களை நான் எழுதினேன். தமிழ் பதிப்பிற்கான தெலுங்கு பாடல்களை சைதன்ய பிரசாத் எழுதினார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடலாசிரியர் சைதன்ய பிரசாத்துடன் இணைந்து நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.இயக்குநர் பி. வாசுவை மனதார பாராட்டுகிறேன். ஏனெனில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் வடிவேலுவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கதையையும், திரைக்கதையும் அமைத்து சந்திரமுகி 2 வை உருவாக்கி இருக்கிறார்.கதையோட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் வெளியாவதில்லை என ஏராளமானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் எனக்கு அமைந்த ஒவ்வொரு பாடல்களும் அருமையான மெலோடி . அழகான சூழல். ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசுகையில், ” பி வாசு சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு முன் அவருடைய அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்போது உறுதியாக இணைந்து பணியாற்றுவோம் என்றார். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு 20 ஆண்டுகளாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் வாசுவிற்கு நன்றி.அவருடன் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் எப்போதாவது ஒருமுறையாவது காட்சிக்காக எழுதப்பட்டிருக்கும் பேப்பரை பார்ப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேப்பரை பார்க்கவில்லை. எப்போதாவது ஒரு சந்தேகம் கேட்டால்…. உடனடியாக அது குறித்த விளக்கத்தை விரிவாக சொல்வார். அவர் இப்படத்தின் கதையை எவ்வளவு நாள் எழுதி இருப்பார்… எவ்வளவு நாள் யோசித்திருப்பார்.. என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எப்போது கேட்டாலும் பேப்பரை பார்க்காமல் தன் நினைவில் இருந்து எல்லா விசயத்தையும் துல்லியமாக சொல்வார்.அதன் பிறகு படத்தின் நாயகனான ராகவா மாஸ்டரை சொல்ல வேண்டும். ஒரு முறை அவரிடம் நாளைக்கு குதிரையேற்றக் காட்சி இருக்கிறது. நினைவிருக்கிறதா? என்றேன். நினைவிருக்கிறது என்றார். ஏதேனும் பயிற்சியை எடுத்திருக்கிறீர்களா? என கேட்டேன். ஓரளவிற்கு என சொல்லிவிட்டார். ஆனால் மூன்று கேமராவை வைத்து அந்த காட்சியை படமாக்கும் போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். குதிரையேற்ற காட்சியில் நேர்த்தியாக நடித்தார். நடனத்தைப் போல் குதிரையேற்ற சவாரியையும் இயல்பாக கற்றுக்கொண்டு நடித்தவர் மாஸ்டர் ராகவா.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அழகாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.‘அழகன்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் கீரவாணியின் ரசிகன் நான். உங்களுடைய பாடலை படமாக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. ” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours