ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

Estimated read time 1 min read
Spread the love

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

ch2
ch2

வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில், ” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன்.நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார்.இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.

நடிகர் சக்திவேல் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றவில்லை. சந்திரமுகியின் ஆட்டத்தையே நம்மால் தாங்க முடியாது. தற்போது அவருடன்

ch2
ch2

காஞ்சனாவும் கூட சேர்ந்திருக்கிறார். சந்திரமுகியும், காஞ்சனாவும் சேர்ந்தால் என்ன ஆகும்..?  இதுதான் இந்தப் படத்தின் மீது எனக்கான மிகப் பெரிய நம்பிக்கை.
அப்பாவிடம் யாராவது சின்ன கோடு போட்டால் அவர் பெரிய ரோடே போடுவார். அப்படி போட்ட ரோடு தான் சந்திரமுகி. இது இரண்டாவது ரோடு. ரெண்டு ரோடுக்கும் இடையில் ஒரு பிரிட்ஜ் இருக்கிறது. அது நம் வடிவேலு அண்ணன். அடுத்த பாகத்திற்கும் அவர்தான் பிரிட்ஜ். சந்திரமுகி படத்தின் முதல் பாகம் எப்படி இயக்குநர் பி. வாசு படமாகவும்.. ரஜினி சார் படமாகவும்.. ஜோ மேடத்தின் படமாகவும்… வடிவேலின் படமாகவும்.. இருந்ததோ, அதேபோல் சந்திரமுகி 2 அப்பாவின் படமாகவும்.. மாஸ்டர் ராகவாவின் படமாகவும்.. கங்கனாவின் படமாகவும்.. அண்ணன் வடிவேலுவின் படமாகவும் இருக்கும்.தலைவருக்குப் பிறகு தர்மத்தின் தலைவன் என்பது மாஸ்டருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். தர்மத்தின் தலைவன் படத்தை நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும். அதில் உங்கள் தம்பியாக நான் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours