
velmurugan
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது அவர் பேசுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அதோடு முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கையும் வைத்து இருக்கிறேன். என கூறினார்,.
காவேரி நீர் என்பது நமது உரிமை அது அவர்கள் வழங்கும் பிச்சை அல்ல. தமிழ்நாடு அரசுக்கு எதிராக கர்நாடகா அரசு செய்துவரும் துரோகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறினார் மேலும், காவிரியை சொந்தம் என்று சொல்வதற்கு கர்நாடகாவிற்கு தகுதி இல்லை எனவும் தெரிவித்தார். ராணுவ கட்டுப்பாட்டிற்கு அணையை எடுத்துக் கொள்ள தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். காவேரி நீர் மேலாண்மை வாரியத்துடன் ராணுவம் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டு நீரை திறக்க வேண்டும் என கூறினார்