‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நடிகர் சிவகுமார் பேசியதாவது…திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசியதாவது…வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி,

பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…அனைவருக்கும் வணக்கம், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை என்றால் இளையராஜா தான், இயக்குநர் என்றால் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. டிரைலரில் பாரதிராஜா, கதாநாயகன் மற்றும் கதாநாயகி மிகவும் நன்றாக நடித்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.
and also :18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக
[…] […]