அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லர்

Estimated read time 1 min read
Spread the love

அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லர்

பிரைம் வீடியோ, எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லரை வெளியிட்டது

மும்பை, இந்தியா—செப்டம்பர் 4, 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அது விரைவில் வெளியிட இருக்கும் கற்பனை க்ரைம் த்ரில்லர் அமேசான் ஒரிஜினல் பம்பாய் மேரி ஜான் தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. எக்செல் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட்டின் ரித்தேஷ் சித்வானி, காசிம் ஜக்மகியா (Ritesh Sidhwani, Kassim Jagmagia) மற்றும்ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) தயாரிப்பில், எஸ். ஹுசைன் ஜைதி எழுதிய கதை , பம்பாய் மேரி ஜான் ரென்சில் டி சில்வா  மற்றும் ஷூஜாத் சௌதாகர் (Rensil D’Silva மற்றும்  Shujaat Saudagar) ஆகியோரின் உருவாக்கத்தில், ஷுஜாத் சவுதாகர் இயக்கிய இந்த தொடரில், அமைரா தஸ்தூருடன் (Amyra Dastur), கே கே மேனன் (Kay Kay Menon),  அவினாஷ் திவாரி (Avinash Tiwary), கிருத்திகா கம்ரா, (Kritika Kamra) மற்றும்  நிவேதிதா பட்டாச்சார்யா (Nivedita Bhattacharya) போன்ற பன்முக நடிப்பாற்றல் மிக்க நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார்கள்.

10 பாகங்கள் அடங்கிய இந்த இந்தி ஒரிஜினல் தொடர் செப்டம்பர் 14 அன்று இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போர்த்துகீசு, ஜப்பான், போலிஷ், லத்தீன் ஸ்பானிஷ், காஸ்டிலியன் ஸ்பானிஷ், அரபிக் மற்றும் துருக்கி. போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் பிரைம் வீடியோவில்  பிரத்யேகமாகத் திரையிடப்படும். இந்தத் தொடரானது, சீன , செக், டேனிஷ், டச்சு, பிலிப்பினோ, ஃபின்னிஷ், க்ரீக், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்கம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய், உக்ரேனிய மற்றும் வியட்நாமீஸ் உட்பட  பல்வேறு அயல்நாட்டு மொழிகளில் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours