Bambai Meri Jaan– அவினாஷ் திவாரி
உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 14 முதல் பம்பாய் மேரி ஜான் ஸ்ட்ரீம் செய்யப்படும்.இந்த கிரைம் திரில்லரில் அவினாஷ் திவாரிமுக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அவினாஷ் திவாரி கூறுகையில், “எனது தாரா கத்ரி கதாபாத்திரம் குறித்து நான் முதன்முதலில் ஸ்கிரிப்டைப் படித்தபோது, வியப்பில் ஆழ்ந்த அதே சமயம் சற்று தயக்கமாக உணர்ந்தேன். பம்பாய் மேரி ஜான் தொடரில் நான் ஏற்று நடிக்கும் நடிக்கும் பாத்திரப்படைப்பு தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகச் சில நடிகர்களுக்கே கிடைக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பாகும். எனது கண்ணோட்டத்தில், வில்லன்கள் எங்குமே இருக்கிறார்கள், அதே சமயம் நேர்மையான கடின உழைப்பு எந்த ஒரு செல்வத்தையும் அதிகாரத்தையும் நமக்குப் பெற்றுத் தராது என்று நம்பும் தாரா, போன்ற ஆற்றல்மிக்க இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
ஒன்றுமில்லாத (பசி) நிலையிலிருந்து இருந்து ஏதோ ஒரு இடத்தைப் பிடித்து (குடும்பத்திற்கும் மக்களுக்கும் ஆதரவாக) அதைத் தொடர்ந்து அனைத்தையும் வெற்றிக்கொள்ளும் (அதிகாரம்), அவரது பயணத்தில் பூக் (பசி) ஒரு ஒன்றிணைந்த பாகமாகும். அனைவரும் பயமும் மரியாதையும் சரிசமமாக கலந்த உணர்வோடு பணிந்து வணங்கும் ஒரு நிலையை அடைய, அவர் ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு மிருகமாக மாறுகிறார். ஒரு இயக்குனராக ஷுஜாத்தின் படைப்பாற்றல், சிறு சிறு விவரங்களின் மீது அவர் செலுத்திய ஆழ்ந்த கவனம் மற்றும் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் வகையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் மன எழுச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கவல்ல அவரது செயல்திறன், காரணமாக இதன் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தின் போது அவரும் ரென்சிலும் கற்பனை செய்த வகையில் தாராவை உயிர்த்தெழச் செய்ய எனக்கு உதவியது. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களிடமிருந்து எதிர்வினைகளை காண நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours