அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த -பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லர்
பிரைம் வீடியோ, எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லரை வெளியிட்டது
“ஜப் இமான்தாரி புக் ஸே தக்ராதி ஹை தோ ஹமேஷா ஹார்தி ஹை. மேன் இமான்தார் தா, பர் தரா பூகா தா.” (“Jab imaandari bhuk se takraati hai to hamesha haarti hai. Main imaandar tha, par Dara bhooka tha.”) என்ற ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் பின்னணிக் குரலோடு தொடங்கும் இந்த, பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லர், 1970 காலகட்டத்தில், குண்டர்களிடையேயான யுத்தம், குற்றச்செயல்கள் மற்றும் துரோகங்கள் போன்ற செயல்பாடுகள் அன்றாட நிகழ்வுகளாகிப்போன கற்பனையில் உருவான பம்பாய் நகரத்தின் நிழல் உலக தெருக்களினூடே ஒரு விடாப்பிடியான ஆழ்ந்த அதிவேகப் பயணத்திற்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது. இந்த பின்னணியுடனான இந்த கற்பனைத் தொடர் வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமையை வெற்றிகொள்ள குற்றசெயலில் ஈடுபடும் தனது மகனை காண நேரும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் மனதைக் கவர்ந்திழுக்கும் ஒரு கதையாகும். இழந்து போன பண்புகள், அதற்கு மாற்றாக பேராசை, மற்றும் ஒழுக்கக் கேடுகளால் சின்னாபின்னமாகிப் போகும் தனது குடும்பத்தை காண நேரும் ஒரு தந்தையின் மன வேதனையை இந்த டிரைலர் கோடிட்டுக் காட்டுகிறது
+ There are no comments
Add yours