போதைப்பொருட்களுக்கு எதிரான ‘உறுதி’ விழிப்புணர்வு குறும்படம் ; மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு எஸ்.ரகுபதி இந்த குறும்படத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் நடிகர் ராஜேஷ், ஏ.எம்.வி பிரபாகர் ராஜா எம்எல்ஏ, கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு காணொளி காட்சி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் பேசும்போது, “போதை என்பது ஒரு கொடிய நோய்.. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் மட்டுமல்ல மாநிலத்தின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும். போதை ஒழிப்பை பொறுத்தவரை தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஒரு சேர நடைபெற வேண்டும். காவல்துறையும் பொதுமக்களும் ஒரே நோக்கத்தோடு செயல்பட வேண்டும். இந்த நான்கும் நேர்கோட்டில் இணைந்தால் போதை இல்லாத தமிழ்நாட்டை நிச்சயம் உருவாக்கலாம்” என்று கூறினார்
and also : விநாயகப் பெருமானின் அவதாரங்கள்
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவதற்காக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பிலே போதைப் பொருட்களுக்கு எதிரான இந்த விழிப்புணர்வு படமாக ‘உறுதி’ என்கிற இந்த குறும்படத்தை தயாரித்துள்ள முகமது ரபி மற்றும் இதை இயக்கிய மங்கை அரிராஜன் இருவருக்கும் நன்றி. ஒழுக்கம் என்கிற குறும்பட வெளியிட்டு விழாவுக்கே இயக்குனர் மங்கை அரிராஜன் அழைத்தபோது சில காரணங்களால் வர முடியாமல் போனது. அதனால் இந்த உறுதி என்கிற குறும்பட வெளியிட்டு இருக்கு உறுதியாக வருகிறேன் என்று கூறி வந்துள்ளேன்.போதைப் பொருட்களுக்கு எதிரான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால் நாம் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதியை மாணவர் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் இந்த குறும்படத்தின் மூலமாக நாம் இன்று தெரிவிக்கின்ற செய்தியாக அமைந்திருக்கின்றது. போதைப்பொருள் நடமாட்டம் இயன்ற வகையில் தடுக்கப்பட்டிருந்தாலும் கூட ஒரு சில தீய சக்திகள் அதை ஒரு விதத்தில் மறைமுகமாக கொண்டு வந்து விடுவார்கள். அதிலிருந்து இளைஞர் சமுதாயத்தையும் மாணவர் சமுதாயத்தையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்.
போதைப் பழக்கத்திற்கு ஒருவன் அடிமையாகி விட்டால் அவனுடைய வாழ்க்கை அத்துடன் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம்.. அதிலிருந்து அவன் மீளவும் முடியாது, வெளியே வரவும் முடியாது.. இதை இளைய சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும் என்கிற விதமாக இதுபோன்ற குறும்படங்கள் அமைந்திருக்கின்றன. போதைப் பழக்கத்திற்கு ஒருவன் அடிமையாகாமல் இருந்தால் வாழ்க்கையில் அவன் நிச்சயம் உயர முடியும்.. எல்லாவிதமான சவால்களையும் சோதனையும் சந்தித்து அதிலிருந்து வெளியேற முடியும்.. வெற்றி பெற முடியும்” என்றார்.
+ There are no comments
Add yours