மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் – ஜெயக்குமார்
1 min read

மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் – ஜெயக்குமார்

Spread the love

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தப் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

AANNA
AANNA

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் அக்காட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா செங்கோட்டையன், பொன்னையன், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஆகியோர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது அவர் பேசுகையில் தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிர செய்தவர் எனவும்.  இயல் இசை நாடக தமிழில் பன்மொழி தன்மை பெற்றவர், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்
தமிழரின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர் எனவும்.

அண்ணா வழியில் கழகம் வெற்றி வெற்றி நடை போடுவதாகவும்

நேற்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு குறித்த கேள்விக்கு,

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான் எனவும் எங்கள் கூட்டணி பாஜக உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவரை பார்த்தார்.உங்கள் கற்பனை எல்லாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டாம்.தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள்.அமலாக்கத்துறை சோதனை தகவல் அடிப்படையில் செய்கிறார்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை குறித்து செய்தியாளர் எழுப்பை கேள்விக்கு ?

அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் இருப்பதாகவும் அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும்

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள் எனவும்

முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது.

அண்ணா பற்றி பேசியதற்கு அதிமுக கண்டம் தெரிவிக்கிறோம் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார் நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *