இன்று உதயநிதி தமிழில் தவறில்லாமல் எழுதுவதற்கு காரணம் கலைஞர் தான் – அன்பில் மகேஷ்

Estimated read time 0 min read
Spread the love

சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு தலைமையில்
ஓய்வறியாச் சூரியனின்
ஒல்காப்புகழ் கவிதை தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் கலைஞரின் பேனா கவித்திருவிழா 2023 பங்கு பெற்ற கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதியார் வித்யா பவன் அரங்கில் நடைபெற்றது
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் , தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி
ஜெ.கருணாநிதி
பகுதி செயலாளர்கள் முரளி, நந்தனம் மதி ,இலக்கிய அணி செயலாளர் வெங்கடேசன்
வட்டச்செயலாளர்கள் பல்வேறு அணியினை சார்ந்தவர்கள்
நிர்வாகிகள் தொண்டர்கள் கவிஞர்கள்
என ஏராளமானோர் பங்கேற்றனர்
ஓய்வறியா சூரியனின் ஒல்காப்புகழ் என்ற நூலினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்..

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் மாவட்டம் தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..

அதன்படி சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் மயிலை.த.வேலு ஏற்பாட்டில் ஓய்வறியாச்சூரியனின் ஒல்காப்புகழ் நூல் வெளியீடு, கலைஞரின் பேனா கவித்திருவிழா பங்கு பெற்ற கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா,
முரசொலி தங்கபாண்டியன் கட்டுரை இருக்கும் அதைப் படியுங்கள்..
தங்க பாண்டியன் தங்காபாண்டியனாக
சென்றுவிட்டார் என்று இருக்கும்
தங்கமாக அக்காவும் பாண்டியனாக அண்ணனும் உள்ளனர்..
.
ஒரு வாரத்திற்கு பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன் என்பதை விட நான் எழுச்சி பெற்றேன் என்று சொல்ல வேண்டும்
காரணம் கலைஞர் என்ற சொல்
அன்பில் மகேஷ் மட்டும் எழுச்சி கொண்ட சொல்லல்ல கலைஞர்
ஒட்டுமொத்த தமிழ்நாடு எழுச்சி கொண்டு சொல். கலைஞர்
எந்த மாவட்ட செயலாளரும் எடுக்காத முயற்சியை மயிலை த.வேலு எடுத்துள்ளார்..
முனைவர் இராஜேந்திரன் முதல் பரிசு பெற்றார் கவிதைகளை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்..

இன்று உதயநிதி தமிழில் தவறில்லாமல் எழுதுவதற்கு காரணம் கலைஞர் தான்
காரணம் கலைஞர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து முரசொலிக்கு எழுதும் கவிதைகளை ஒவ்வொரு நாளும் அவரது உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுத்து பார்க்கச் சொல்வார், அவர் பள்ளி செல்லும் உதயநிதியை அழைத்து படிக்க சொல்வார் அன்று கலைஞரின் கவிதைகளை படித்து புரிந்து கொண்டு தான் இன்று உதயநிதி தமிழை பிழையில்லாமல் ஒவ்வொரு கவிஞர்களுடைய கவிதைக்கும் அழகாக தமிழில் பிழையில்லாமல் பதில் அளித்து வருகிறார்…

தமிழை தவறு இல்லாமல் எழுதுவதற்கு சாதாரண மக்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் கொண்டு சேர்த்தவர் யார் என்றால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான்.
முத்தமிழறிஞரை பற்றி மட்டுமே அனைவரும் இந்த நூலில் எழுதியுள்ளார்கள்..
இந்த புத்தகத்தை படித்தாலே நம்மை அறியாமலேயே கவிதை வரும்..
தமிழ் என்று யார் எழுதுகிறார்களோ
அவர்கள் எல்லாம் பரிசு பெறுபவர்கள் தான்..
சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றவனாக நான் தற்பொழுது நிற்கிறேன் என்றார்..

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்

அர்ச்சனை மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்றம் வழக்காடு மொழியாக மாற்றம் எண்ணியவர் கலைஞர்
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல
எதையும் திணிக்காதீர் என்கிறோம் என்ற அவர் கலைஞரின் கவித்தொண்டு குறித்து உரையாற்றினார்..

பின்னர் பேசிய ஐ.லியோனி

பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்தாக பேசுகிறார் ஒரு அமைச்சர் மற்றொரு அமைச்சர் 34ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதையை பேசுகிறார் ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் பாராளுமன்றத்தில் கண்ணியமான பேச்சுகளை பேசுகிறார்..
திருநெல்வேலி கூட்டத்தில் நடந்தது குறித்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார் நாளிழதலில் வெளியான
செய்தியினை பார்த்து விட்டு ஒரு கலைஞனுக்கு என்ன ஆச்சோ என்று உடனடியாக பேசியவர்…
என கலைஞர் போல் பேசிய காண்பித்தார்.
உலக அரசியல் தலைவர்களில் கலைஞர் என்று அழைக்கப்பட்ட ஒரே தலைவர் கலைஞர்
ரஜனிகாந்த் இன்று ஜெயிலர் ,
ஒரு நாள் தலைவரை பார்க்க வந்த போது அன்றைய சூழலில் பத்திரிக்கையாளர்கள் என்ன பேசினார் என்று கேட்டார்கள் அதற்கு அவர் என்னிடம் தமிழில் பேசினார் திரும்பவும் கேட்கவும் நாங்கள் பேசியதை சொல்லவேணாம் என்று சொன்னார்…என் தம்பி அன்பில் மகேஷ் எனக்கு அமைச்சரராக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது.அவர் அப்பா கொடுத்த பேனாவால் என்னை கையெழுத்து இட சொன்னார்.
நானும் அன்பில் மகேஷ் , தமிழச்சி தங்கபாண்டியன் ஒரே குடும்பமல்ல ஆனால் அக்கா என அழைக்கிறோம் என்றால் இது தான் திராவிட குடும்ப அரசியல்.
நடந்து செல்லும் பெண்களுக்கு இரண்டும் சிறகுகள் முளைத்திருக்கும் அது தான் இலவச பேருந்து பயணம்…அது தான் விடியல் பயணம் என்றார்…

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours