மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘அடியே’

Estimated read time 1 min read
Spread the love

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது  தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், ” எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’ திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றியடையும். ஏனெனில் வித்தியாசமான திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். குறிப்பாக ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. கேட்கும் பொழுதெல்லாம் எந்த தடையும் இல்லாமல் முழு மனதுடன் வருகை தந்து நடித்துக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நல்ல படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தரமான தயாரிப்பு நிறுவனமாக எங்கள் நிறுவனம் வளரும். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இந்த படத்தில் நடிகர் மதும்கேஷ் பிரேம் புதுமுக நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் புது முகமாக நடிக்கும் போது சந்தித்த அனைத்து சவால்களையும் அவரும் எதிர்கொண்டார்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு மக்கள் திரையரங்கிற்கு வருகை தருவது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தை காண திரையரங்கத்திற்கு வருகை தந்தால், ஒரு புதிய படைப்பை கண்டு ரசிக்கும் அனுபவம் கிடைக்கும். ” என்றார் ‌

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பது மிகவும் நிறைவாக இருந்தது. என் வேலையை இயக்குநர் எளிதாக்கிவிட்டார். படத்தில் நடித்த ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி, ஆர் ஜே விஜய் என அனைவரும் தங்களது பணியை நிறைவாக செய்திருந்தார்கள். படத்தை காணும் போது பல இடங்களில் பின்னணியிசை இல்லாமல் மௌனமாக.. அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற சூழல் இருந்தது.
ஒளிப்பதிவாளர் கோகுலுடன் நான் இணைந்து பணியாற்றும் ஐந்தாவது படம். அவர் இந்த கதையை .. வித்தியாசமான ஒளியமைப்புகளின் மூலம் புரியும்படி காட்சிக்கோணங்களை அமைத்திருக்கிறார். இரு வேறு உலகங்களையும் நீங்கள் நன்றாக ரசிப்பீர்கள்.
படத்தொகுப்பாளர் முத்தையனின் கடின உழைப்பு இப்படத்தில் தெரியும். இது அவரின் சிறந்த படைப்பு என சொல்லலாம். அவரின் படத்தொகுப்பு தான்.. நான் இசையமைப்பதற்கு தூண்டுதலாக இருந்தது.ஜீ. வி. பிரகாஷ் குமார் நேர்நிலையான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடியவர்.
இவர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் பேசுகையில், ” படத்தின் கதையை இயக்குநர் சொன்னவுடன்..மிகவும் சிக்கலான இந்த கதையை எல்லோருக்கும் புரியும் படியாக எப்படி காட்சிப்படுத்தப் போகிறோம் என்பதில் தான் சவால் இருந்தது. பட தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உழைத்ததால் இது சாத்தியமானது. அனைவரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.படத் தொகுப்பாளர் முத்தையன் பேசுகையில், ” இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் படத்தொகுப்பை மேற்கொள்ளும் போது இயக்குநரும், நடிகர் ஜீவி பிரகாஷ் குமாரும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவர். ஜீ. வி. பிரகாஷின் சமூகம் குறித்த பார்வையும், எண்ணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்.” என்றார்.நடிகர் மதும்கேஷ் பிரேம் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் குறித்து பொதுவெளியில் விவரிக்க கூடாது என இயக்குநர் நிபந்தனை விதித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் புதுமுக நடிகரான எனக்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக் குழுவினர் சௌகரியமான சூழலை ஏற்படுத்தி பணியாற்றி வைத்தனர். என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours