சுகாதார சீர்கேடு தொடர்பாக பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி -மா.சுப்பிரமணியன்
சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி சென்னையை சிங்கப்பூர் மாதிரி வைத்திருந்தாரா??? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூட பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….”

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது….ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவை சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 12 லட்சம் படித்து வருகிறார்கள், இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் இந்த மாதம் கண் பரிசோதனைகளை செய்யலாம் என்று தமிழ் நாடு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்கள் வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் 400 கண் மருத்துவர்கள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவர்களையும் வைத்து கொண்டு 12 லட்சம் பேருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது….மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களிடம் குழந்தைகள் எப்படி பழக வேண்டும் எப்படி தள்ளி நிறக்க வேண்டும் என்ற தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்த கண் பரிசோதனை நடைபெற உள்ளது, 16 ஆம் தேதி காலை ஏதாவது ஒரு பள்ளியில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்…
தமிழ்நாட்டில் 3,702 பேர் இதுவரை கண் தானம் தந்து உள்ளனர் என்று கூறிய அவர் போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அண்டை மாநிலங்களவை கர்நாடக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் போதை வஸ்துக்களை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், பள்ளிக்கு அருகாமையில் இது போன்ற போதை விஷயங்கள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான் என்றார்..
சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் கேள்விக்கு….
சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா??? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூட பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்….
+ There are no comments
Add yours