‘மக்கள் களம்’ தளபதி வீடு அல்லது முதலமைச்சர் வீடு என்று கூற வேண்டும் – கனிமொழி

இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியத்தில் உள்ள காயாமொழி ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று,குறைகளைக் கேட்டறிந்தார். நிகழ்வில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) குறித்து பேசிய கனிமொழி எம்.பி, வீடு கட்டா ஒன்றிய அரசு ரூபாய் 72 ஆயிரம் தருகிறது. ஆனால் 1.68 இலட்சம் ரூபாய்

தமிழ்நாடு அரசு தருகிறது. இனிமேல்,
தளபதி வீடு அல்லது முதலமைச்சர் வீடு என்று கூற வேண்டும். அது ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி வீடு இல்லை என பேசினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ரமேஷ், காயாமொழி ஊராட்சி தலைவர் D.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+ There are no comments
Add yours