ஆவணி வளர்பிறை பஞ்சபியை மகாலட்சுமி பஞ்சமி என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.இதற்கு மகாலட்சுமி நோன்பு என்று பெயர்.
அன்று மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பை தரும்.மகாலட்சுமி வழிபட்டால் நீண்ட ஆயுள் செல்வம் உடல்நலம் உண்டாகும் லட்சுமி அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது
ஆவணி வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வணங்கினால் அஷ்ட போக பாக்கியங்களை கிடைக்கும்.மகாலட்சுமி அருள் பார்வையுடன் அழகாக விளங்குபவள். முக்கியமாக இவர் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிவாள்.
மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினத்தில் சிறப்பு பூஜை செய்யலாம்.மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.
பசு நெய் ஊற்றி இரண்டு முக விளக்கு ஏற்றி வழிபடவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் சமர்ப்பிக்க வேண்டும்.
+ There are no comments
Add yours