பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!

Estimated read time 1 min read
Spread the love

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!

KK
KK

தனித்தியங்கும் இசைச்சமூகத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ள ‘அதிசயமே’ பாடல் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்பாடல் வரிகளில் பெண்மையின் அம்சங்கள் உலக அதிசயங்களுக்கும், இயற்கையின் அழகுக்கும் இணையாக உள்ளதெனக் கூறுவது கருத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இப்பாடல் பெண்களின் அழியாத அழகுக்கு பெருமை சேர்க்கும் எனலாம். இசையார்வமுள்ளவர்கள் அனைவரும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.

கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான தளத்தைப் பா மியூசிக் தொடர்ந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours