பம்பர் படத்துக்காக விருது பெற்ற நடிகர் வெற்றி!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ம் தேதி நெல்லை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் உள்ள நெல்லையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 1ம் தேதி தரமணியில் நெல்லை தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நெல்லையை சேர்ந்தவரான நடிகர் வெற்றி கலந்துகொண்டார். பம்பர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும் பம்பர் படத்தின் இயக்குனர் செல்வகுமார், அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோருக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
+ There are no comments
Add yours