நீட் தேர்வு கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதம்
திருநெல்வேலியில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 252வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நீட் தேர்வு கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதம். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர், ஒன்றிய அரசை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அறவழிப் போராட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு உரையாற்றினார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் T.P.M.மைதீன்கான், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours