பலமுறை கொன்று விட்டார்கள் – ரோபோ சங்கர் வேதனை

Estimated read time 1 min read
Spread the love

“கடந்த ஆறு மாதத்திற்குள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள்” ; துடிக்கும் கரங்கள் விழாவில் ரோபோ சங்கர் வேதனை

இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, வசந்தமணி, திருமலை நடிகர்கள் ரோபோ சங்கர், காளிவெங்கட் , டேனி போப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “கடந்த ஆறு மாத காலத்திற்குள் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில யூடிபர்கள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள். என் வீட்டில் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள். மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனை இப்படி காயப்படுத்தலாமா ?” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

நகைச்சுவை நடிகர் டேனி பேசும்போது, “ஜெயிக்கிற படத்தில் ஜெயிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.. நானும் சிம்புவும் ஒரு விளம்பர படத்தில் நடித்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன் மிகப்பெரிய பிரச்சனையும் சலசலப்பும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர் வந்ததும் கப்சிப் ஆகி வேலைகள் சரியாக நடக்கத் துவங்கின. இப்போது வெளியாகும் படங்களில் நடித்துள்ள பெரிய நடிகர்கள் கூட பிரமோஷன் என்கிற பெயரில் உணவு விமர்சனம் செய்ய இறங்கி விட்டதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.

tk
tk

இயக்குநர் திருமலை பேசும்போது, “பத்து பேர் மட்டுமே திரையுலகை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து இதை தடுக்க வேண்டும். தயாரிப்பாளர் கே.ராஜன் தனியாளாக இதற்காக போராடுகிறார். நூறு பேர் ஒன்று சேர்ந்தால் தான் இந்த பத்து பேரை விரட்ட முடியும்” என்று கூறினார்.இந்த நிகழ்வில் நடிகர் சவுந்தர்ராஜா பேசும்போது, “முன்பெல்லாம் குழந்தைகளிடம் படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டராக, கலெக்டராக ஆகப்போகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் இன்றுள்ள குழந்தைகளிடம் கேட்டால் பெரிய யூடியூபராக வரப் போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு மீடியா பவர்ஃபுல்லாக மாறி உள்ளது.
அதே சமயம் எல்லோருமே மீடியா ஆகிவிட்டதால் நல்ல விஷயத்தை விட கெட்ட விஷயம் அதிக அளவில் சென்றடைகிறது. வாட்ஸ் அப், யூட்யூப் சொல்லும் விஷயங்களை பெரும்பாலான மக்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். அதனால் சொல்லும் விஷயத்தை எந்த அளவிற்கு அதில் உண்மை தன்மை இருக்கு என்று தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்கோபால் வர்மா படங்களில் பணியாற்றிய ராமி கவனித்துள்ளார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும் கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும் சண்டைப் பயிற்சியை சிறுத்தை கே.கணேஷ்குமாரும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மும்பையில் தற்போது மணி சர்மாவின் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை” என்று கூறினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours