விமலை பாராட்டிய கே ராஜன்

Estimated read time 1 min read
Spread the love

“தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான்” ; கே.ராஜன் பாராட்டு

துடிக்கும் கரங்கள் இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது “பெரிய படங்கள் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் கட்டுக்கட்டான பணம் மீண்டும் திரையுலக்கிற்கு வருவதில்லை. ஆனால் இதுபோன்ற சின்ன படங்கள் வெற்றி வரும்போது அந்த பணம் மீண்டும் அடுத்த படத்திற்காக இங்கேயே புழக்கத்தில் இருக்கும். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான். ரஜினியின் கடந்த சில படங்கள் மும்பையில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் தான் அந்த படத்தில் வேலை பார்த்தார்கள். ஆனால் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு அங்கே ஏதோ பிரச்சனை என்பதால் நிறுத்தப்பட்டு இங்கே சென்னையில் செட் போட்டு எடுத்தார்கள்.. அது சாத்தியம் என்கிற போது இங்கே தமிழ்நாட்டிலேயே படம் எடுக்கலாமே” என்று கூறினார்.

vimal
vimal

இயக்குனர் பேரரசு பேசும்போது, “நடிகர் விமல் மிகச்சிறந்த நடிகர். சத்யராஜுக்கு அடுத்ததாக மிக நீளமான வசனங்களையும் நிறுத்தாமல் பேசக்கூடியவர். நடிகர் மோகனுக்கு அடுத்ததாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய நடிகராக இப்போது இருப்பவர் நடிகர் விமல் தான். அவரது திறமையை  இந்த திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை. இப்படத்தில் விமலா இது என ஆச்சரியப்படும் வகையில் ஆக்ஷனில் பின்னி இருக்கிறார். இன்றைய சூழலில் யூடியூபர்கள் எல்லா நடிகர்களின் படங்களையும் ஆதரிக்க வேண்டும். அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்ற சண்டையை பெரிதாக்க கூடாது. நாங்கள் என்ன அரசியலா செய்து கொண்டிருக்கிறோம் ? நாங்கள் சினிமா படம் எடுக்கிறோம். யாருக்கு எந்த பட்டம் கொடுக்க வேண்டும் என நீங்கள் உங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக தயவு செய்து எங்கள் குடும்பத்தில் கை வைக்காதீர்கள். ஒவ்வொரு ஹீரோவின் படத்தையும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். யூடியூபர்கள் மூட்டிவிடும் சண்டையில் பலிகடா ஆகி விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours